கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரில் மூழ்கி பலி
நீரில் மூழ்கி பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே மடம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரகோத்குமார்(வயது 6). சம்பவத்தன்று இவன் அதே பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி சுப்புராயலு என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தான். இதைப்பார்த்து மற்ற சிறுவர்கள் ஓடோடி வந்து ரகோத்தமனின் பெற்றோரிடம் தெரிவித்தனர். 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கிராமமக்களுடன் கிணற்றை நோக்கி ஓடோடி சென்று ரகோத்தமனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியாகிவிட்டான். பின்னர் கிணற்றில் பிணமாக மிதந்த ரகோத்தமனின் உடலை கிராமமக்கள் மீட்டனர். இதைப் பார்த்து கிராமமக்களும், சிறுவனின் பெற்றோரும் கதறி அழுதனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .இது குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com