பிளஸ்-2 தேர்வில் தோல்வி: கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

பிளஸ்-2 தேர்வில் மாணவி தோல்வி அடைந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி இளமதியின் உடல்.
கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி இளமதியின் உடல்.
Published on

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நல்லாத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் இளமதி (வயது 17). இவர் நல்லாத்தூர் அருகே உள்ள குதிரைசந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இன்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் மாணவி இளமதி 2 பாடங்களில் தோல்வி அடைந்தார்.

இதனால் மாணவி மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணவேணி, கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக மிதந்த இளமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com