

களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள தம்புபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி இந்திரா (29). அதே தெருவை சேர்ந்தவர் பூல்பாண்டி மகன் பண்டாரம். இந்திரா தெருவில் செல்லும் போதெல்லாம் பண்டாரம் அவரை பார்த்து அவதூறாகவும், ஆபாசமாக பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இந்திரா வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது பண்டாரம் அவரை ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இந்திரா இது குறித்து கணவர் சோமசுந்தரத்திடம் தெரிவித்தார்.
இதையடுத்து சோமசுந்தரம் பண்டாரத்தை தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பண்டாரம், சோமசுந்தரத்தை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.