உத்தரகாண்ட்டில் கனமழை: கைலாஷ் மானசரோவர் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட்டில் கனமழை: கைலாஷ் மானசரோவர் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
Published on

டேராடூன்:

இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையையும், அங்குள்ள மானசரோவர் ஏரியையும் தரிசிப்பதற்காக இந்துக்கள் ஆண்டுதோறும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 

இந்தியாவில் இருந்து சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற திபெத்தில் உள்ள இந்த கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி தொடங்கியது. 

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் அடைக்கப்பட்டுவிட்டன. 

மங்க்தி பகுதியில் இரண்டு பாலங்களும், சிம்கோலா பகுதியில் ஒரு பாலமும் சேதம் அடைந்துள்ளது. ஐலகாத், காளி ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகளால் சாலைகள் முடக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com