ஒன்று இலவசம்..!

கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்.பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்.
ஒன்று இலவசம்..!
Published on

ஒன்று வாங்கினால்

ஒன்று இலவசம் என்பது

இன்று நிறைய கடைகளில்

வாடிக்கை ஆகி விட்டது

வாழ்க்கையிலும் அப்படித்தான்..

கோபத்தை வாங்கினால்

இரத்தக் கொதிப்பு இலவசம்

பொறாமையை வாங்கினால்

தலைவலி இலவசம்

வெறுப்பை வாங்கினால்

பகை இலவசம்

கவலையை வாங்கினால்

கண்ணீர் இலவசம்

நம்பிக்கையை வாங்கினால்

நண்பர்கள் இலவசம்

உழைப்பை வாங்கினால்

ஆரோக்கியம் இலவசம்

அமைதியை வாங்கினால்

ஆனந்தம் இலவசம்

நேர்மையை வாங்கினால்

நிம்மதி இலவசம்

அன்பை வாங்கினால்

அனைத்து நன்மைகளும் இலவசம்

இலவசமாக எது வேண்டுமென்று

இன்றேனும் முடிவு செய்யுங்கள்.

. -திருச்சி தர்மா

X

Maalai Malar
www.maalaimalar.com