கபிஸ்தலம் அருகே ஆடு மேய்த்த தகராறில் கோஷ்டி மோதல் - 6 பேர் படுகாயம்

கபிஸ்தலம் அருகே ஆடு மேய்த்த தகராறில் கோஷ்டி மோதலில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம் அருகே ஆடு மேய்த்த தகராறில் கோஷ்டி மோதல் - 6 பேர் படுகாயம்
Published on

கபிஸ்தலம்:

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பழனிச்சாமி (வயது 57) விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் சண்முகன் மகன் சுரேஷ் (32) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலில் ஆடு மேய்த்ததில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் பழனிசாமியை சுரேஷ் தரப்பினர் திட்டியதாக கூறி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஆயுதங்களுடன் மோதினர். இதில் சண்முகம், சுரேஷ், மேகநாதன், லட்சுமணன், பழனிசாமி, லட்சாதிபதி ஆகிய 6 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு ,ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பழனிசாமி கொடுத்த புகாரின் சண்முகம், சுரேஷ், மேகநாதன், ஆகியோர் மீதும், சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் லட்சுமணன், பழனிசாமி, லட்சாதிபதி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com