ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தற்கொலை
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை முக்கனூரை சேர்ந்தவர் சுரேஷ். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (வயது 20). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது திருமணமான 4 மாதத்துக்கு பிறகு வெளிநாடு சென்ற சுரேஷ் 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.

வீட்டில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கார்த்திகா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கார்த்திகாவின் தந்தை வடிவேலு ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் வரதட்சனை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

போலீசார் கார்த்திகா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடம் ஆவதால் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com