ஜோலார்பேட்டையில் புதுப்பெண் வி‌ஷம் குடித்து மரணம்

ஜோலார்பேட்டையில் வயிற்று வலி காரணமாக புதுப்பெண் விஷம் குடித்து உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டையில் புதுப்பெண் வி‌ஷம் குடித்து மரணம்
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த புள்ளாநேரி கிராமத்தை சேர்ந்தவர் வினாயகமூர்த்தி (வயது 27) லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா (20). இவர்களுக்கு கடந்த 6 மாதங்கள் முன்பு திருமணம் நடந்தது. அர்ச்சனா 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் அர்ச்சனாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்றும் பார்த்துள்ளார். இன்று காலை வலி மீண்டும் ஏற்பட்டுள்ளது. வலியை தாங்கமுடியாமல் வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்துள்ளார். இதை கண்ட வீட்டில் இருந்தவர்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே இறந்தார்.

இது குறித்து ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com