திருவண்ணாமலையில் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக டிரைவர் தற்கொலை

திருவண்ணாமலையில் வேறு ஊருக்கு இடமாற்றம் செய்ததால் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக டிரைவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சரவணன்
சரவணன்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தீபம் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பின்புறம் உள்ள ரெயில்வே கேட் அருகே அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு அவர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான சரவணனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேறு ஊருக்கு இடமாறுதல் உத்தரவு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சரவணன் குடிபோதையில் இரவு அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சரவணனுக்கு சுதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இதுகுறித்து விழுப்புரம் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com