குறும்பனை அருகே என்ஜினீயர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

குறும்பனை அருகே என்ஜினீயர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை கொள்ளை
நகை கொள்ளை
Published on

கருங்கல்:

கருங்கலை அடுத்த குறும்பனை, இனிகோ நகரை சேர்ந்தவர் ஜேசர் பெனான்ஸ் (வயது 41).

ஜேசர் பெனான்ஸ் துபாய் நாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தான் இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

இதையடுத்து ஜேசர் பெனான்ஸ் மற்றும்அவரது குடும்பத்தினர் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றனர். கடந்த புதன்கிழமை சென்ற அவர்கள் இன்று காலை வீடு திரும்பினர்.

இனிகோ நகர் வீட்டுக்கு சென்றதும் அங்கு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கதவின் அருகே பூட்டை உடைக்க பயன்படுத்திய ஸ்குரு டிரைவரும் காணப்பட்டது.

வீட்டின் உள்ளே சென்றபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருள்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது.

ஜேசர் பெனான்ஸ் துபாயில் இருந்து வந்தபோது ரூ.2700 துபாய் நாட்டு பணம் வைத்திருந்தார். பீரோவில் இருந்த அப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

ஜேசர் பெனான்ஸ் வேளாங்கண்ணி சென்றிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்தான் இக்கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

வீட்டில் நகை, பணம் கொள்ளைபோனது பற்றி ஜேசர் பெனான்ஸ் கருங்கல் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீஸ் ஏ.எஸ்.பி. கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று கொள்ளையரின் கைரேகைகள் பதிவாகி உள்ளதா? என சோதனை செய்தனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இருக்கிறதா? அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோப்ப நாய் ஓராவும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com