

ஜம்மு:
காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ்வர் ஷர்மா இன்று அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக முன்னாள் உளவுத்துறை இயக்குநர் தினேஷ்வர் ஷர்மா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நேற்று, காஷ்மீருக்கு சென்ற தினேஷ்வர் அங்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சில அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை தினேஷ்வர் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி நிலவ மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதனையடுத்து, இன்று அல்லது நாளை அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் மாநில ஆளுநர் என்.என்.வேஹ்ரா ஆகியோரையும் தினேஷ்வர் சந்தித்து பேச இருக்கிறார்.
முன்னாள் உளவுத்துறை இயக்குநரான தினேஷ்வர் சர்மா காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டது பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.