சரவணபெலகோலா மகா கும்பாபிஷேக விழா நாளை தொடக்கம்

கர்நாடகத்தில் சரவணபெலகோலாவில் அமைந்துள்ள பாகுபலி சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சரவணபெலகோலா மகா கும்பாபிஷேக விழா நாளை தொடக்கம்
Published on

பெங்களூர்:

கர்நாடகம் மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சரவண பெலகோலா புண்ணிய தலம் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலித்து வரும் 57 அடி உயரத்தில் புகழ்பெற்று விளங்கும் பாகுபலி சுவாமிக்கு 88-வது ஆண்டாக மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு கும்பாபிஷேக விழா கடந்த 7-ம் தேதி தொடங்கியது. தொடக்க விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பாகுபலியின் அருளை பெற்றுச் சென்றார். 

இந்நிலையில், பாகுபலி சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெறவுள்ளது. இதைக்காண  நாட்டின் அனைத்து  மாநிலங்களில் இருந்தும் சாதுக்கள், குருமார்கள், ஆச்சாரியர்கள், சமண தியாகிகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், நாளை தொடங்கும் மகா கும்பாபிஷேக விழா வரும் 25-ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் சுமார் 30 லட்சம் முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேக நீரை பக்தர்கள் மீது தெளிப்பதற்கு வசதியாக 1,008 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.

பாகுபலி சுவாமியின் மகா கும்பாபிஷேக விழாவுக்காக நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் மாநில அரசு ரூ.175 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com