

காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் உளவுத்துறை பயிற்சியகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் அஃப்ஸர் பகுதியில் அந்நாட்டின் உளவு அமைப்பாக உள்ள தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் பயிற்சியகம் அமைந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.10 மணியளவில் இந்த பயிற்சியக வளாகத்திற்குள் நுழைந்த சில தீவிரவாதிகள் புதிய கட்டுமானம் நடைபெற்றுவரும் இடத்தின்மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு ஈடுகொடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தந்தனர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நஸ்ரத் ரஹீம் தெரிவித்துள்ளார். பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு உளவுத்துறை பயிற்சியகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உளவுத்துறை பயிற்சியகத்தில் நுழைந்து எங்கள் அமைப்பை சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என குறிப்பிட்டுள்ளது.