ஐ.பி.எல். போட்டியில் யூசுப் பதானின் அடிப்படை விலை ரூ.75 லட்சம்

ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய யூசுப் பதானின் தடை காலம் வருகிற 14-ந் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியில் அவரது அடிப்படை விலை ரூ.75 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #IPL
ஐ.பி.எல். போட்டியில் யூசுப் பதானின் அடிப்படை விலை ரூ.75 லட்சம்
Published on

மும்பை:

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யூசுப்பதான். ஊக்க மருந்து விவகாரத்தில் இவருக்கு 5 மாதம் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதியில் இருந்து இந்த தடை தொடங்கியது. வருகிற 14-ந் தேதியுடன் இந்த தடை முடிவடைவதால் ஐ.பி.எல். போட்டியில் ஆடுவார்.

வருகிற 26-ந் தேதி, 27-ந் தேதி நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் அவர் இடம் பெறுவார். அவரது அடிப்படை விலை ரூ.75 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகப்பட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடி பட்டியலில் காம்பீர், ஹர்பஜன்சிங் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com