ஸ்மார்ட்ரான் எஸ்.ஆர்.டி.போன் இந்தியாவில் வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்

ஸ்மார்ட்ரான் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி புதிய எஸ்.ஆர்.டி.போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள முழு சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
ஸ்மார்ட்ரான் எஸ்.ஆர்.டி.போன் இந்தியாவில் வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்
Published on

புதுடெல்லி:

ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் எஸ்.ஆர்.டி. போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் இரு மாடல்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 32 ஜிபி மாடல் ரூ.12,999 என்றும் 64ஜிபி மாடல் ரூ.13,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

சிறப்பம்சங்களை பொருத்த வரை டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட், 5.5 இன்ச் ஃபுல்-எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 652 சிப்செட், 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர், 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. 

இன்டெர்னல் மெமரியை பொருத்த வரை 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 62 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வை-பை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, GPS/ A-GPS, எஃப்.எம் ரேடியோ மற்றும் என்.எஃப்.சி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போனில் குவிக் சார்ஜ் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 

பிளிப்கார்ட் தளத்தில் புதிய ஸ்மார்ட்ரான் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு பழைய போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.1500 தள்ளுபடியும், சச்சின் டெண்டுல்கர் வடிவமைப்பு கொண்ட ரூ.599 மதிப்புள்ள பேக் கவர் ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.1,499 மதிப்புடைய நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது கூடுதலாக 5 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

முன்னதாக ஸ்மார்ட்ரான் கடந்த ஆண்டு ஸ்மார்ட்ரான் டி.போன் மற்றும் ஸ்மார்ட்ரான் டி.புக் சாதனங்களை வெளியிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்ரான் டி.புக் ரூ.39,999 என்றும் கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட டி.போன் ரூ.22,999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com