குத்துச்சண்டை: காயம் காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகினார் விகாஸ் கிருஷ்ணன்

ஜோர்டானில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் காயம் காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
விகாஸ் கிருஷ்ணன்
விகாஸ் கிருஷ்ணன்
Published on

ஜோர்டான் அம்மான் நகரில் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 69 கிலோ எடைபிரிவில் இந்தியாவை சேர்ந்த விகாஸ் கிருஷ்ணன் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

ஆனால் காயம் காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதனால் வெள்ளி பதக்கம் பெற்றார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com