

இன்ஃபோகஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இன்ஃபோகஸ் டர்போ 5 பிளஸ் மற்றும் ஸ்னாப் 4 என இரண்டு ஸ்மார்ட்போன்களும் அதிவேகமாக இயங்கும் கைரேகை ஸ்கேனர் மற்றும் 4ஜி வோல்ட்இ வசதி கொண்டுள்ளன.
மெட்டல் வடிவமைப்பு கொண்ட புதிய இன்ஃபோகஸ் ஸ்மார்ட்போன்களும் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இன்ஃபோகஸ் டர்போ 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா மற்றும் 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டர்போ 5 பிளஸ் ஸ்மார்ட்போன் டர்போ 5 ஸ்மார்ட்போனின் பெரிய மாடல் ஆகும்.
ஸ்னாப் 4 ஸ்மார்ட்போனில் பெயருக்கு ஏற்றார்போல் நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா மற்றும் 13 எம்பி + 8 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இன்ஃபோகஸ் டர்போ 5 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 5.5-இன்ச் 1280x720 பிக்டல் எச்டி IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் MT6750 பிராசஸர், T860 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4850 எம்ஏஎச் பேட்டரி
இன்ஃபோகஸ் ஸ்னாப் 4 சிறப்பம்சங்கள்:
- 5.2-இன்ச் 1280x720 பிக்சல் எச்டி IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் MT6750N பிராசஸர், T860 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி + 8 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஎச் பேட்டரி