

புதுடெல்லி:
இன்ஃபோகஸ் நிறுவனத்தின் எபிக் 1 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. ஜூன் 28-ந்தேதி நடைபெற இருக்கும் விழாவிற்கான அழைப்பிதழ்களை இன்ஃபோகஸ் வெளியிட்டுள்ளது.
புதிய இன்ஃபோகஸ் ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்பது மட்டும் தெரியவந்துள்ள நிலையில் மற்ற தகவல்கள் மர்மமாகவே உள்ளது. இந்தியாவில் புதிய இன்ஃபோகஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
எனினும் இன்ஃபோகஸ் வெளியிட்டுள்ள டீசரில் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் மற்றும் ஆண்டெனா லைன்ஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. இதனால் புதிய ஸ்மார்ட்போனில் யுனிபாடி மெட்டல் வடிவமைப்பு மற்றும் 50 மணி நேரத்திற்கு தடையில்லா இசையை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் புதிய இன்ஃபோகஸ் ஸ்மார்ட்போன் சீன நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.