வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்

டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஒருநாள் கிரிக்கெட்
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஒருநாள் கிரிக்கெட்
Published on

போர்ட் ஆப் ஸ்பெயின்,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் போட்டி டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற  இந்திய அணி பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளது. 2006-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி இழந்தது கிடையாது.

அந்த சாதனையை தக்க வைத்து கொள்ள இந்திய அணி முனைப்பு காட்டும். அதே நேரத்தில் 20 ஓவர் போட்டி தொடரில் சந்தித்த மோசமான தோல்விக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் தேடிக்கொள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி போராடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com