முதல் ஒருநாள் கிரிக்கெட்: டிக்வெல்லா அரைசதத்தால் இலங்கை 27.1 ஓவரில் 150/3

தம்புல்லாவில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 27.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஒருநாள் கிரிக்கெட்: டிக்வெல்லா அரைசதத்தால் இலங்கை 27.1 ஓவரில் 150/3
Published on

அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 74 ரன்கள் சேர்த்தது. 14-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா 44 பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு டிக்வெல்லா உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இலங்கை அணி 18.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டிக்வெல்லா 65 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 139 ரன்னாக இருக்கும்போது டிக்வெல்லா 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். டிக்வெல்லா அவுட்டான சிறிது நேரத்தில் மெண்டிஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் பட்டேல் பந்தில் க்ளீன் போல்டானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com