இந்தியாவிற்கு எதிரான காலே டெஸ்ட்: இலங்கை கேப்டன் விளையாடவில்லை

இலங்கை அணியின் டெஸ்ட் கேப்டன் சண்டிமல், நிமோனியா காய்ச்சலால் இந்தியாவிற்கு எதிரான காலே டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான காலே டெஸ்ட்: இலங்கை கேப்டன் விளையாடவில்லை
Published on

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 26-ந்தேதி காலே மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இருநாட்டு வீரர்களும் தயாராகி வருகிறார்கள்.

இந்நிலையில் இலங்கை அணியின் கேப்டன் சண்டிமல் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்து பார்க்கும்போது, நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் காலே டெஸ்டில் சண்டிமல் கலந்து கொள்ளமாட்டார் என்று இலங்கை அணி மேலாளர் குருசிங்கா கூறியுள்ளார்.

ஆகவே, காலே டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை இந்தியா இலங்கை சென்றிருந்த போது காலே மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக 162 ரன்கள் குவித்து இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com