49 நாட்களாக கடலில் தவித்த மீனவர் உயிருடன் மீட்பு

இந்தோனேசியாவில் கடந்த ஜூலை மாதம் புயலில் படகுடன் அடித்து செல்லப்பட்ட மீனவர் 49 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். #AldiNovelAdilang
49 நாட்களாக கடலில் தவித்த மீனவர் உயிருடன் மீட்பு
Published on

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவை சேர்ந்தவர் ஆல்டிநோவல் அடிலாங் (19). இவர் படகில் இருந்தபடி மீன்களை பிடித்து விற்று வருகிறார். சில கம்பெனிகள் நேரடியாக வந்து அவரிடம் இருந்து மீன்களை விலைக்கு வாங்கி செல்கின்றன.

கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவில் புயல் தாக்கியது. அதில் அவரது படகு அடித்து செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கடலில் தொடர்ந்து தனியாக பயணம் செய்து கொண்டே இருந்தார்.

49 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்த அவர் ஜப்பான் கடற்கரையை சென்றடைந்தார். வழியில் 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்து சென்றன. அவர்களிடம் உதவி கோரினார். யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.

கடலில் தனியாக பயணம் செய்த காலத்தில் மீன்களை பிடித்து அவற்றை படகு வீட்டின் கட்டைகளை விறகாக்கி சமைத்து சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com