திருமண வரன் தேடுபவர்களை விட ‘டேட்டிங்’ செல்ல ஆன்லைனில் ஜோடியை தேடுபவர்கள் அதிகம்

இந்தியாவில் ஆன்லைனில் திருமண வரன் தேடுபவர்களை விட “டேட்டிங்” செல்ல ஜோடியை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. #Matrimony #OnlineDating
திருமண வரன் தேடுபவர்களை விட ‘டேட்டிங்’ செல்ல ஆன்லைனில் ஜோடியை தேடுபவர்கள் அதிகம்
Published on

இந்தியாவில் 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் ஆன்லைனில் டேட்டிங் தொடர்பான தகவல்களை ஆர்வமாக தேடுபவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

கூகுள் இணையதளத்தில் மட்டும் 37 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் “டேட்டிங்” தொடர்பான வெப்சைட்டுகளில் தகவல்களை தேடிப்பார்த்துள்ளனர்.

இதே காலக்கட்டத்தில் ஆன்லைனில் திருமண வரன் தேடுபவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

எவ்வளவு பேர் “டேட்டிங்” தகவல்களை தேடிப்பார்த்தனர் என்ற எண்ணிக்கையை “கூகுள்” தெரிவிக்கவில்லை என்றாலும் திருமண வரன் தேடுபவர்களை விட “டேட்டிங்” செல்ல ஜோடியை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

இதில் 24 சதவீதம் பேர் காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்த விரும்புவதாகவும், 21 சதவீதம் பேர் ரொமான்டிக் டின்னருடன் காதலை வெளிப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

34 சதவீதம் பேர் பரிசுகள் கொடுத்தும், 15 சதவீதம் பேர் விடுமுறை திட்டமிடல் மூலமும் காதலை சொல்ல விரும்புவதாக கூறி உள்ளனர்.

ஆய்வில் மேலும் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக, 86 சதவீதம் பேர் திருமணத்துக்கு பின்புதான் காதலர் தினத்தை கொண்டாட விரும்புவதாக கூறி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com