இத்தாலி நாட்டில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்: பயப்பட வேண்டாம் என சுஷ்மா ட்வீட்

இத்தாலி தலைநகர் மிலனில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்ததை அடுத்து நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், யாரும் பயப்பட வேண்டாம் எனவும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
இத்தாலி நாட்டில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்: பயப்பட வேண்டாம் என சுஷ்மா ட்வீட்
Published on

புதுடெல்லி:

இத்தாலி தலைநகர் மிலனில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்ததை அடுத்து நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், யாரும் பயப்பட வேண்டாம் எனவும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். மிலன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் அங்கு தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதை உறுதி செய்துள்ள இந்திய தூதரகம் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் உண்மைதான் என்றும் இது தொடர்பாக  இத்தாலி அரசிடம் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், யாரும் பயப்பட வேண்டாம், கவலை வேண்டாம் என மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com