அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு

அமெரிக்கவின் சிகாகோ மாகாணத்தில் படித்து வரும் தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவர் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு
Published on

சிகாகோ:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உபால் பகுதியை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 30). இவர் அமெரிக்காவின் இலினாய்ஸ் நகரில் உள்ள டெவ்ரி பல்கலைகழகத்தில் மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் மற்றும் டெலிகம்யூனிகேசன்ஸ் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அங்குள்ள சாலையின் நடந்து சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அக்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இலினாய்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் தனது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரை பார்க்க நாங்கள் அமெரிக்கா செல்வதற்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் அவரச விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்பரின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com