காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் பதிலடி: 3 பாகிஸ்தான் வீரர்கள் பலி

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியில் 3 பாக். வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்
Published on

பூஞ்ச்

காஷ்மீரின் உரி மற்றும் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியா கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து வடக்கு ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் கூறும்போது:-

கடந்த சில நாட்களாக, பாகிஸ்தானால் ஊடுருவல்களை தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற ஊடுருவல் முயற்சிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் ஆதரிக்கப்படுகிறது. இங்கு இந்திய ராணுவம் முற்றிலும் எச்சரிக்கையாக உள்ளது. இதுபோன்ற அனைத்து முயற்சிகளையும் எங்களால் தோல்வி அடைய செய்ய முடிந்தது

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com