வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள்
வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள்
Published on

இதனையடுத்து தொடக்க வீரர்களாக லீவிஸ், சுனில் நரேன் களமிறங்கினர். சுனில் நரேன் 2 ரன்களிலும் லீவிஸ் 10 ரன்களிலும் ஹெட்மெயர் 1 ரன்களில் வெளியேறினர். இந்நிலையில் பொல்லார்டு உடன் புரான் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். புரான் 17 ரன்களிலும் நிலைத்து ஆடி அரை சதம் அடித்த பொல்லார்ட் 58 ரன்களிலும் சைனி பந்து வீச்சில் வெளியேறினார்.

கடைசியில் வந்த பவுல் 20 பந்துகளில் 32 ரன்கள் விளாச இந்திய அணிக்கு 147 ரன்களை வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்தது.
இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், சைனி 2 விக்கெட்டும், ராகுல் சாஹர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. லோகேஷ் ராகுல், தவான் களம் இறங்கினார்கள்.  ஆட்டத்தின் 1.6வது ஓவரில் தாமஸ் வீசிய பந்தில் தவான் 3(5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அவரை தொடர்ந்து இந்திய அணியின்  கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார்.

இந்நிலையில் ராகுல், கோலி இருவரும் இணைந்து ஜோடி சேர்ந்த நிலையில் ஆட்டத்தின் 4.4வது ஓவரில் ராகுல் 20(18) ரன்கள் எடுத்து அவுட்டானார். அதனை தொடர்ந்து ரிஷப் பந்த் களம் இறங்க கோலியுடன் இணைந்த அவர் ரன்களை வெகுவாக குவிக்க துவங்கினர்.   அணியின் கேப்டன் கோலி 50 ரன்களை கடந்த போது  ஆட்டத்தின் 17.3 வது ஓவரில் 45 பந்துகளை சந்தித்து 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அணியின் கேப்டன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார் தாமஸ்.  தொடர்ந்து நிலைத்து நின்று ஆட்டத்தின் போக்கை மாற்றிய ரிஷப் பந்த் அரை சதத்தை கடந்த நிலையில் பாண்டியா இணைந்து கொண்டார்.  

இறுதியில் ரிஷப் பந்த் 42 பந்துகளை சந்தித்து 65 ரன்கள் எடுத்து தனது ஆட்டத்தின் திறமையை வெளிப்படுத்தினார்.  இறுதியில் இந்திய அணி 19.1 வது ஓவரில் 150 ரன்கள் எடுத்து தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.  இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 19.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 150 ரன்கள் பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக ரிஷப் பந்த் 65 (45) ரன்களும், கேப்டன் கோலி 59 (45) ரன்கள் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் தாமஸ் 2 விக்கெட்டும், ஆலன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com