

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா - வங்காளதேச அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதற்கான இறுதி போட்டி இன்று நடைபெற்றது.
107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் வங்காள தேசம் அணி களமிறங்கியது. அதர்வாவின் துல்லியமான பந்து வீச்சால் வங்களாதேச அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய அணி தரப்பில் அதர்வா 5 விக்கெட்டுகளும் ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளும் மிஸ்ரா, பட்டில் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக அதர்வா தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக இந்திய அணியின் அர்ஜூன் அசாத் தேர்வு செய்யப்பட்டார்.