டெல்லி அருகே வெட்டுக்கிளிகள் படையெடுப்பு

தலைநகர் டெல்லிக்கு மிக அருகில் உள்ள அரியானாவின் குருகிராம் நகரில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.
வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள்
Published on

புதுடெல்லி:

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது அரியானா மாநிலத்தில் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

தலைநகர் டெல்லிக்கு மிக அருகில் உள்ள அரியானாவின் குருகிராம் நகரில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதைப்போல் உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லையோர நகரங்களிலும் வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளன. டெல்லிக்கு அருகே வெட்டுக்கிளிகள் படையெடுத்திருப்பது உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அரியானா மற்றும் உத்திர பிரதேசத்தில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கட்டுப்படுத்த ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சிறப்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com