நகராட்சியில் சொத்து, வீட்டுவரிகளை உயர்த்துவதை கைவிட வேண்டும்: இ.கம்யூ. மாநாட்டில் தீர்மானம்

ராஜபாளையம் நகராட்சியில் சொத்து, வீட்டுவரிகளை அதிக அளவில் உயர்த்துவதை கைவிட கோரி இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சியில் சொத்து, வீட்டுவரிகளை உயர்த்துவதை கைவிட வேண்டும்: இ.கம்யூ. மாநாட்டில் தீர்மானம்
Published on

ராஜபாளையம்:

இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் ராஜபாளையம் நகர மாநாடு நடந்தது. கட்சி கொடியை பாடகலிங்கம் ஏற்றினார்.

மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை முருகன் முன்மொழிந்தார் தர்மசாஸ்தா வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராமசாமி, முன்னாள் எம்.பி.க்கள் அழகிரிசாமி, லிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சமுத்திரம், பழனிக்குமார், முருகேசன் ஆகியோர் பேசினர்.

நகரச்செயலாளராக ரவியும், துணைச் செயலாள ராக முருகனும் தேர்வு செய்யப்பட்டனர்.

ராஜபாளையத்தில் நகராட்சி எவ்வித அறிவிப்பும் செய்யாமல் சொத்துவரி, வீட்டுவரியை அதிகமான அளவில் உயர்த்துவதை கைவிட வேண்டும்.

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், சத்திரப்பட்டி பி.ஏ.சி.ஆர். சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பெடல்தறியில் பணி புரிபவர்களுக்கு கூலிஉயர்வு வழங்க வேண்டும் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், தொழிற் சாலைகளில் முறையாக தொழிலாளர் நலச் சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும்.

ராஜபாளையம் அரசு பொதுமருத்துவமனை மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்து வமனை சீர்கேடுகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com