இந்தியா ‘ஏ’ 417 ரன்கள் குவிப்பு: தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ 5 விக்கெட் இழப்பிற்கு 159

மைசூரில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ 417 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
இந்தியா ஏ அணி
இந்தியா ஏ அணி
Published on

இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மைசூரில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் ஷுப்மான் கில்லின் (92) சிறப்பான ஆட்டத்தால்  இந்தியா ‘ஏ’ 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்திருந்தது.

கருண் நாயர் 78 ரன்னுடனும், சகா 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கருண் நாயர் நேற்றைய 78 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த சகா 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஷிவம் டுபே 84 பந்தில் 68 ரன்களும், சக்சேனா ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 417 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் மார்கிராம் சிறப்பாக விளையாட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பீட்டர் மலன் 6 ரன்னிலும், ப்ரூயின் 41 ஜோண்டோ 5 ரன்னிலும், முத்துசாமி 12 ரன்னிலும், கிளாசன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

மார்கிராம் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, 2-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com