எடப்பாடியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்தும், கைது செய்யக்கோரியும், எடப்பாடி பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

எடப்பாடி:

சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்தும், கைது செய்யக்கோரியும், எடப்பாடி பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சேலம் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் சின்னுசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கோபி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். 

சிங்கை பிரபாகர், ஈரோடு மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்கள். இதில் எடப்பாடி நகர செயலாளர் மெய்வேல், நிர்வாகிகள் அறிவொளி தங்கராஜ், முருகன், வெங்கடாசலம், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com