பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம் வேண்டுகோள்

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிளாஸ்டிக்கில் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. #IndependenceDay #PlasticFlags #HomeMinistry
பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம் வேண்டுகோள்
Published on

புதுடெல்லி:

இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பிளாஸ்டிக்கில் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம்.

அதற்கு பதிலாக காகித்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். மேலும், சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை உரிய மரியாதையுடன் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது. #IndependenceDay #PlasticFlags #HomeMinistry

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com