2 பெண்களை பலாத்காரம் செய்ய முயன்ற 14 ஆண்கள்: உ.பி. பா.ஜ.க. ஆட்சியில் அவலம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 2 பெண்களை 14 ஆண்கள் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 பெண்களை பலாத்காரம் செய்ய முயன்ற 14 ஆண்கள்: உ.பி. பா.ஜ.க. ஆட்சியில் அவலம்
Published on

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் 2 பெண்களை 14 ஆண்கள் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தாண்டா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது.

வீடியோ எடுக்கப்பட்ட போது தெளிவாக இல்லை. ஆனால், அந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் நேற்று இரவு வேகமாக பரவியது.

வீடியோவில் உள்ள நபர்களை தெளிவாக அடையாளம் காண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், குறுகிய சாலை வழியாக இரண்டு பெண்களும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த வழியில், சிலர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்தனர். சுற்றிலும் மரங்கள் இருந்தது. 

அப்போது அந்த இரண்டு பெண்களை அவர்கள் மறித்து தள்ளி, இழுத்து அவர்களை துஷ்பிரயோகம் செய்தனர். வீடியோவில் பெண்களில் அலறல் சத்தம் கேட்கிறது. 

போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டான். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com