ஜனாதிபதியாக 70 வயதிற்கு மேலும் பணிபுரிய முடியும் என்றால், பிசிசிஐ-யில் ஏன் முடியாது- நிரஞ்சன் ஷா

இந்திய ஜானாதிபதி 70 வயதிற்கு மேலும் பணிபுரிய முடியும் என்றால், எங்களால் பிசிசிஐ அதிகாரிகளாய் ஏன் பணி புரிய முடியாது என்று நிர்ஞ்சன் ஷா கேட்டுள்ளார்.
ஜனாதிபதியாக 70 வயதிற்கு மேலும் பணிபுரிய முடியும் என்றால், பிசிசிஐ-யில் ஏன் முடியாது- நிரஞ்சன் ஷா
Published on

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்று லோதா தலைமையிலான கமிட்டி உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு கருத்துக்களை பரிந்துரை செய்தது. அதில் 70 வயதிற்கு மேற்பட்டோர் பிசிசிஐ-யில் பணிபுரியக்கூடாது, ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்பது மிக முக்கியமானதாகும்.

இதனால் ஸ்ரீனிவாசன், நிரஞ்சன் ஷா போன்ற மூத்த அதிகாரிகள் பிசிசிஐ அதிகாரிகளாக நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக ஒரு குழுவை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் சிறப்பு அழைப்பராக நிரஞ்சன் ஷா சேர்க்கப்பட்டுள்ளார். 70 வயதிற்கு மேற்பட்டோர் பணிபுரியக்கூடாது என்ற பரிந்துரைக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிரஞ்சன் ஷா கூறுகையில் ‘‘பிசிசிஐ அலுவலத்தில் உள்ள வீரர்களின் வயது வரம்பு கட்டுப்பாட்டை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நம்புடைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் 70 வயதை தாண்டி பணிபுரிய முடியும் என்றால், பிசிசிஐ அதிகாரிகள் 70 வயதையும் தாண்டி பணிபுரிவதில் என்ன தவறு. நீங்கள் உடற்தகுதியாக இருந்தால், சாகும்வரை வேலை செய்ய முடியும். இந்த பரிந்துரையை நான் வயது பாகுபாடு என்று அழைக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com