இந்தியாவில் அனைத்து இடங்களிலும் காற்று மாசுபாடு உள்ளது. ஆனால் பிசிசிஐ போட்டிக்கான இடத்தை ஏற்கனவே முடிவு செய்து விட்டது. நம் வேலை விளையாடுவது மட்டுமே. எத்தகைய சூழ்நிலையிலும் விளையாட்டின் மீது மட்டுமே நம்முடைய கவனம் இருக்க வேண்டும்.
இலங்கை வீரர்கள் காற்று மாசுபாடு காரணமாக முகத்தில் மாஸ்க் அணிந்து விளையாடினர். மாசு அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு விளையாட்டு சிறுது நேரம் நிறுத்தப்பட்டது. இரண்டு இலங்கை வீரர்கள் சுவாசிக்க மிகவும் சிரமமாக இருப்பதால் வெளியே சென்றனர். இது குறித்து தொடர்ச்சியாக இந்திய அணிக்கு புகார் வந்து கொண்டே இருந்தது.
நடுவர்கள் இந்த பிரச்சனை குறித்து வீரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரண்டு நாட்களாக பேட்டிங் செய்து வருகிறார். ஆனால் அவர் எத்தகைய மாஸ்க்கும் அணியவில்லை. அவர் அணிக்கு வெற்றி தருவதில் மட்டுமே குறிப்பாக இருந்தார். இந்திய வீரர்களுக்கு தொந்தரவு கொடுக்கவே இலங்கை வீரர்கள் காற்று மாசுபடு குறித்த பிரச்சனையை எழுப்பினர் என இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் இலங்கை அணி குறித்து புகார் அளித்துள்ளார்.
அதே போல் இந்த பிரச்சனை குறித்து வீரேந்திர சேவாக் பேசுகையில், இலங்கை வீரர்கள் இரண்டு நாட்களாக மைதானத்தில் பயிற்சி செய்தனர். அப்போதும் காற்று மாசுபாடு அதிகமாகவே இருந்தது. வீரர்கள் விளையாடுவதற்கு தகுந்த சூழ்நிலையில்லை என்றால் விளையாடாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் விளையாடிக்கொண்டிருக்கும் போது இடையே இது போன்ற பிரச்சனையை எழுப்புவது சரியன்று. அவர்கள் இந்திய வீரர்களுக்கு தொந்தரவு கொடுக்கவே இது மாதிரியான காரியங்களில் ஈடுபடுகின்றனர். விராட் கோலியின் ரன்களை குறைப்பதற்காக இந்த முயற்சி நடந்துள்ளது.
இலங்கை வீரர்கள் ஒரு விளையாட்டு வீரர்களை போல் நடந்து கொள்ளவில்லை. அவர்களின் நடவடிக்கையில் தவறு இருப்பதா இல்லையா என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
விராட் கோலி சரியான நேரத்தில் டிக்ளர் செய்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய வைத்துள்ளார். இலங்கை வீரர்கள் பேட்டிங் செய்யும் போது மாஸ்க் அணியவில்லை. அப்போதும் மாசு இருக்கதான் செய்தது. இலங்கை வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறினார்.