ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் 16 போர் விமானங்களை இறக்கி சாதனை

அவசர காலங்களில் விமானங்களை நெடுஞ்சாலையில் தரை இறக்குவது குறித்த ஒத்திகை நடத்தி இந்திய விமானப்படை சாதனை படைத்துள்ளது.
எக்ஸ்பிரஸ் சாலையில் தரை இறங்கிய போர் விமானம்
எக்ஸ்பிரஸ் சாலையில் தரை இறங்கிய போர் விமானம்
Published on

உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த ஒத்திகை நடந்தது. உன்னாயோ மாவட்டத்தில் பங்கார்மாயூ என்ற இடத்தின் அருகே நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் 16 விமானங்கள் தரை இறக்கப்பட்டன.

அவற்றில் 16 போர் விமானங்கள் அடங்கும். மேலும் சி-130 ரக, சரக்கு விமானமும் தரை இறக்கப்பட்டது. இந்த விமானம் 35 ஆயிரம் கிலோ எடை கொண்டது. முதன் முறையாக இந்த விமானம் நெடுஞ்சாலையில் தரை இறக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகை சுமார் 2 மணி நேரம் நடந்தது. முன்னதாக போர் விமானங்கள் லாவகமாக பறந்து வந்து தரை இறங்கின. அவற்றை சாலையோரம் கூடிநின்று ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தரை இறக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com