

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் “ஐ மண் தொண்டு நிறுவனம்", தமிழ்நாடு முழுவதும் கடந்த பல வருடங்களாக மரங்கள் நட்டு அவற்றை பாதுகாத்து வருகிறது. சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், பள்ளி- கல்லூரிகளிலும் நாட்டு மரங்களை நட்டு பராமரித்து வருகிறது.
தண்ணீர் பிரச்சனைக்கு ஒரு காரணமாக அமையும் சீமைக் கருவேல மரங்களை, சென்னையை சுற்றி அகற்றி வருகிறது. கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் நம் நாட்டு மரங்களான அரச மரம், புங்கம், அசோகம் போன்ற மரங்களை நட்டு வருகிறது. இரத்ததான முகாம், திருமண நிகழ்ச்சிகளிலும் மரக்கன்றுகள் மற்றும் அழிந்து வரும் மூலிகை செடிகளை வழங்கி சேவை செய்து வருகிறது.
நமது மாநில மரமான பனை மர விதைகளை சேகரித்து அவற்றை பல்வேறு பகுதிகளில் நட்டு, இம்மரத்தை பற்றிய விழிப்புணர்வு அனைவரும் பெற வழிவகை செய்கிறது. விவசாயத்தை காக்க வேண்டியும் பல்வேறு பகுதிகளில் துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம் செய்கிறது.
தற்போது நிலவி வரும் ஆக்சிஜன் குறைபாட்டை முன்னிறுத்தி, மரம் வளர்க்காவிட்டால் காற்றை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும் என்று "ஆக்சிஜன் புரட்சி" செய்து வருகிறது. வருங்கால தலைமுறை சுத்தமான காற்றை சுவாசிக்க விழிப்புணர்வு கூட்டமும் நடத்திவருகிறது.
இதுதவிர, தொடர்ந்து சமூக சேவை செய்து வரும் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு ஐ மண் தொண்டு நிறுவனம் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இயற்கை ஆர்வலரான குப்புராஜ், இந்த "ஐ மண் தொண்டு நிறுவனத்தை" ஆரம்பித்து, பள்ளி-கல்லூரி மாணவர்களை ஆங்காங்கே ஒருங்கிணைத்து சேவை செய்ய தொடர்ந்து மாணவர்களை ஊக்குவித்து வருகிறார்.
இவர்களோடு இணைந்து சேவை செய்ய விரும்புவோர் 8124078906, 8124000828 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இணையம்: www.imuncharitabletrust.org.