ஹோன்டா இரண்டு பிரபல கார்களின் ஹைப்ரிட் மாடல்கள் விரைவில் வெளியாகிறது

ஹோன்டா நிறுவனம் தனது இரண்டு பிரபல கார்களின் ஹைப்ரிட் மாடல்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹோன்டா இரண்டு பிரபல கார்களின் ஹைப்ரிட் மாடல்கள் விரைவில் வெளியாகிறது
Published on

இந்தியாவில் 2030-ம் ஆண்டு வாக்கில் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தவதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்திய சந்தைக்கு ஏற்ற எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ள நிலையில் ஹோன்டா நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ஹோன்டா சிட்டி மற்றும் ஜாஸ் கார்களின் ஹைப்ரிட் மாடல்களை ஹோன்டா வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹோன்டா சிட்டி செடான் மற்றும் ஜாஸ் ஹேட்ச்பேக் மாடல்கள் 2020-ம் ஆண்டு வாக்கில் அப்டேட் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து புதிய மாடல்கள் ஹைப்ரிட் பதிப்புகளாக வெளியிடப்படலாம்.

புதிய ஹோன்டா சிட்டி மற்றும் ஜாஸ் மாடல்கள் ஏற்கனவே ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 108bhp மற்றும் 134Nm செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின்கள் லில்தியம்-அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இவை 29.5bhp மற்றும் 170Nm  செயல்திறன் கொண்டுள்ளது.

இணைக்கப்பட்ட அவுட்புட் 138bhp மற்றும் 170Nm செயல்திறன் கொண்டிருக்கிறது. ஹைப்ரிட் சிட்டி மற்றும் ஜாஸ் மாடல்களில் 7-ஸ்பீடு டுவின்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. ஹோன்டாவின் ஹைப்ரிட் மாடல்கள் லிட்டருக்கு 25 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com