கபிஸ்தலம் அருகே கணவர் பேசாததால் மனைவி தீக்குளித்து தற்கொலை

கபிஸ்தலம் அருகே கணவர் பேசாததால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கபிஸ்தலம் அருகே கணவர் பேசாததால் மனைவி தீக்குளித்து தற்கொலை
Published on

கபிஸ்தலம்:

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள தேவங்குடி அண்ணாமலை நகரில் வசிப்பவர் தியாகராஜன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 27) இவர்களுக்கு திருமணமாகி 6 வருடமாகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பேசவில்லை. கணவர் பேசாததால் மனமுடைந்த கலைச்செல்வி வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கலைச்செல்வியின் தந்தை காசிநாதன் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தன் மகள் இறந்ததில் சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார் அதன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கலைச்செல்விக்கு திருமணமாகி 6 வருடமே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்தாரா? எனவும் தஞ்சாவூர் ஆர்.டி.ஒ விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com