கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு- விரக்தியில் மனைவி தற்கொலை

தேனி அருகே கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

தேனி:

தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டி காளியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவருக்கும் மாலதி(24) என்பவருக்கும் கடந்த 6½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹரிணி, ஹரிகரன் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவர் ஈஸ்வரன் கடந்த சில வருடங்களாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இதுகுறித்து மனைவிக்கு தெரியவரவே அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இருந்தபோதும் ஈஸ்வரன் தனது தொடர்பை விடவில்லை. இதனால் மனமுடைந்த மாலதி சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது அண்ணன் மகன் நாகராஜ் கொடுத்த புகாரின்பேரில் பழனி செட்டி பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com