நான்கு கேமரா ஸ்மார்ட்போன்: பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய ஹானர் திட்டம்

இந்தியாவில் நான்கு கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஹானர் தெரிவித்துள்ளது.
நான்கு கேமரா ஸ்மார்ட்போன்: பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய ஹானர் திட்டம்
Published on

புதுடெல்லி:

ஹூவாய் ஹானர் பிரான்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹானர் 9i எனும் ஸ்மார்ட்போனினை டூயல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களுடன் அறிமுகம் செய்திருந்தது. அந்த வகையில் இம்மாத இறுதிக்குள் நான்கு கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. 

அந்த வகையில் ஹானர் வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனில் 5.65 இன்ச் ஃபுல் எச்டி + ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 13 எம்பி + 2 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களை கொண்டிருக்கிறது. 

கிரின் 659 சிப்செட் கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போன், மற்ற ஹூவாய் மற்றும் ஹானர் ஸ்மார்ட்போன்களை போன்று ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் சார்ந்த EMIUI 8.0 கொண்டு இயங்கும் மேலும் மெட்டல் ஃபிரேம், கிளாஸ் பேக் மற்றும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ஹானர் 9 லைட் சிறப்பம்சங்கள்:

- 5.65 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- ஆக்டாகோர் கிரின் 659 பிராடஸர்

- மாலி T830-MP2 GPU

- 3 ஜிபி / 4 ஜிபி ரேம் 

- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்

- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, PDAF

- 13 எம்பி + 2 எம்பி செல்ஃபி கேமரா

- கைரேகை ஸ்கேனர்

- 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், GPS / GLONASS

- 3000 எம்ஏஎச் பேட்டரி

ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் 1199 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.11,670 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை மற்றும் இதர தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். 

X

Maalai Malar
www.maalaimalar.com