

புதுடெல்லி:
ஹூவாய் ஹானர் பிரான்டு இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. ஹானர் 9 லைட் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. 5.65 இன்ச் புல் ஹெச்.டி.+ ஃபுல் ஸ்கிரீன் 18:9 டிஸ்ப்ளே, கிரின் 659 சிப்செட், ஆண்ட்ராய்டு ஓரியோ சார்ந்த EMUI 8.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி + 2 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்படங்களை அழகாக்க பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முந்தைய மாடல்களை விட பல்வேறு புதிய நிறங்களை வழங்குவதற்கு ஏற்ற திரை புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது.
ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் மெட்டல் ஃபிரேம், கிளாஸ் பேக், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. புதிய ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற சந்தைகளில் ஒரு மாதத்திற்கு அறிமுகம் செய்யப்படாது என ஹானர் அறிவித்திருக்கிறது.
ஹானர் 9 லைட் சிறப்பம்சங்கள்:
- 5.65 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் கிரின் 659 பிராசஸர்
- மாலிT830-MP2 GPU
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
- இரண்டாவது 2 எம்பி செல்ஃபி கேமரா, PDAF
- 13 எம்பி + 2 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஎச் பேட்டரி
ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கிரே போன்ற நிறங்களி்ல் கிடைக்கிறது. இந்தியாவில் 3 ஜிபி ரேம் கொண்ட ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் ஹானர் விற்பனை தளங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஜனவரி 21-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.