வீட்டில் வைத்து பாலியல் தொழில்: இளம்பெண் மீட்பு

வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வீட்டில் வைத்து பாலியல் தொழில்: இளம்பெண் மீட்பு
Published on

மதுரை:

மதுரை கூடல்புதூர் விஸ்வநாதபுரம் மருது பாண்டியன் தெருவில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்- இன்ஸ்பெக்டர் காசி தலைமையிலான போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்டனர்.

அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சென்னை ராமாவரத்தைச் சேர்ந்த சிவகுமார் (வயது 37), அவரது மனைவி உமா மகேசுவரி (31), கோவில் பாப்பாக்குடியைச் சேர்ந்த சுரேந்திரகுமார் (24) கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் புதுப்பட்டி சண்முகசூர்யா மனைவி ஜோதி (32), துரைசிங்கம் (38), கனி (31) ஆகியோரும் பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 2 டேப் ரிக்கார்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com