பார் கவுன்சில் தேர்தலில் நோட்டா பயன்படுத்த பரிசீலிக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

பார் கவுன்சில் தேர்தலில் நோட்டா வாய்ப்பை வழங்குவது குறித்து சிறப்புக் குழு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #BarCouncilelection
பார் கவுன்சில் தேர்தலில் நோட்டா பயன்படுத்த பரிசீலிக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் வக்கீல் எஸ்.ஆறுமுகம். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் வருகிற மார்ச் 28-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பலர் போட்டியிடுகின்றனர். இவர்கள் யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாத நபர்கள், யாருக்கும் விரும்பவில்லை என்று பதிவு செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் இதுபோல யாருக்கும் ஓட்டுப்போட விரும்பவில்லை (நோட்டா) என்று ஓட்டுப்பதிவு செய்ய வழிவகை உள்ளது. அதுபோல பார் கவுன்சில் தேர்தலிலும் நோட்டா வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பார் கவுன்சில் தேர்தலை நடத்தும் சிறப்புக்குழுவுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் நமோ நாராயணன் ஆஜராகி வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘பார் கவுன்சில் தேர்தலில் நோட்டா வாய்ப்பை வழங்குவது குறித்து சிறப்புக் குழு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்தர விட்டார். # #BarCouncilelection  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com