நாமக்கல்லில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

நாமக்கல்லில் நேற்று நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தொடங்கி வைத்தார்.
ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. நாமக்கல் முதலைப்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகில் இருந்து இந்த ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.

இதையொட்டி 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தவாறு ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் சேலம் ரோடு, மெயின்ரோடு, பஸ்நிலையம் வழியாக சென்று பூங்கா சாலையில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்துக்கு முன்பாக வாகனம் ஒன்றில் ஒலிபெருக்கி மூலம் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், பின்னால் அமர்ந்து பயணம் செய்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தி சென்றனர்.

இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், இளமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், நித்யா, ராஜ்குமார், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com