மும்பையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மும்பை:

இந்தியாவில் பரவமழை காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக

பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் முதல் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

குறிப்பாக மும்பையின் ஆண்ட்கிரி, ஜொஜேஷ்வரி, கோரிஹன், மலட், போரிவாலி உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை புரட்டி எடுத்தது. 

இதனால் நகரின் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிராவில் மழை தொடர்ந்து இன்றும் நீடிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com