மகாராஷ்டிராவை புரட்டி எடுத்த கனமழை

மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்துவருகிறது.
கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு
கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு
Published on

மும்பை:

இந்தியாவில் பரவமழை காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக பீகார், அசாம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 

குறிப்பாக மும்பை, தானே, புனே,ரைய்ஹட் உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று கனமழை புரட்டி எடுத்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கனமழை நீடிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ரெட் அலர்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com