மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை

மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மும்பை:

இந்தியாவில் பரவமழை காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக

பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

குறிப்பாக மும்பை, புனே, தானே, பாராமதி, உள்ள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை புரட்டி எடுத்தது. இதனால் நகரின் சாலைகள் மற்றும் குடியிருப்பு 

பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிராவில் மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடர்ந்து நீடிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மும்பை மற்றும் தானே பகுதிகளில் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தெலுங்கானா மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com