வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் கனமழை- விவசாயிகள் மகிழ்ச்சி

வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழை
மழை
Published on

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவும் கனமழை பெய்தது. மின்னக்கல், அனந்த கவுண்டபாளையம், அக்கரைப்பட்டி, ஓ.சவுதாபுரம், அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, செம்மாணடப்பட்டி, தொட்டிபட்டி, அத்தனூர், பழந்தின்னிபட்டி, ஆலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையினால் வெங்காயம் சாகுபடி செய்ய காத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரவு 8.30 மணிக்கு தொடங்கிய மழை 10.30 மணி என சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது.

இதேபோல நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com